நாரஹேன்பிட்டி, 397 ஆவது தோட்டப பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு ஆளான ஒருவர், பொலிஸாரால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 50 வயதான நபராவார்
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, நாரஹேன்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.