அரசியல்உள்நாடு

தேர்தல்கள் குறித்து வெளியான தகவல் – வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்

நாட்டில் எதிர்வரும் ஆண்டுகளில் எந்தத் தேர்தல்களும் நடத்தப்பட மாட்டாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தின் 2026 தொடக்கம் 2029 வரையான காலப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மூலோபாயத் திட்டங்களை தயாரிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலிலே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சித் தலைவர்களுடன் குருநாகல் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்திலே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்:

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிப்பதை கட்டாயமாக்கவும், வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல்களுக்கும் பெரும் செலவுகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, தேர்தலில் அதிகபட்ச முடிவுகளை அடைவதே எமது நோக்கம்.

இதற்காகவே இந்த முடிவை எடுத்தோம். எதிர்காலத்தில் தேர்தலுக்கான வைப்புத் தொகையை அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பில் மூன்று ராஜபக்ஷர்களும் இருந்தனர்

பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor

ஆட்சியாளர்கள் இனவாதத்தை ஏற்படுத்தினாலும் நாம் இன மதபேதமின்றி ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

editor