உள்நாடுபிராந்தியம்

குருநாகல் பாடசாலையிலிருந்து 30 பாம்புக் குட்டிகள், 55 முட்டைகள் மீட்பு

குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிபருக்கு அறிவித்தனர்.

அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.

பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

Related posts

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

editor

மட்டக்களப்பில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்

editor