அரசியல்உள்நாடு

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சபரகமுவ மாகாண சபையின் வழி காட்டலுடன் கொடகவெல பிரதேச செயலகம் மற்றும் கொடகவெல பிரதேச சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அழகிய நியங்கம வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (17) கொடகவெல நியங்கம பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் போது மேற்படி பிரதேசத்தில் மர நடுகை, மற்றும் கைவிடப்பட்ட குள நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் வீட்டுக் கழிவு முகாமைத்துவம் பற்றிய தெளிவூட்டலும் நிகழ்வுவும் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ, கொடகவெல பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் அஜினி பிரத்திபா உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கலந்து கொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

சுமார் 327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

 நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் விவகாரம் – நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களுடன் தொடர்புடையது.