அரசியல்உள்நாடு

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரசேத சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிரதேச சபை முன்றலில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு இன்று தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றபோது, இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டதுடன் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டமும் செய்வதன்றும் முடிவு செய்தனர். அந்த வகையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-கே எ ஹமீட்

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் – இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

editor

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைப்பதற்கு ஏற்ற அறிவு அரசாங்கத்திற்கு இல்லை – ரணிலின் தொங்கு பாலத்தில் தான் இந்த அரசும் நடைபோடுகிறது – நளின் பண்டார எம்.பி

editor

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]