அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் நதீஷா சந்திரசேன

அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (WIPO) நடத்தப்பட்ட விருது விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான WIPO சர்வதேச விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, ஜூலை 21 அன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளால் அடைபடும் வடிகால்களில் ஏற்படும் தடைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, கலாநிதி நதீஷாவினால் உருவாக்கப்பட்ட ‘ஸ்மார்ட் வடிகால் அமைப்புக்கான’ (Smart Drainage System) எண்ணக்கருவிற்கே சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற WIPO விருது விழாவில் 95 நாடுகளைச் சேர்ந்த 780 நிறுவனங்களையும் தாண்டி வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சந்திப்பின்போது பிரதமர், கலாநிதி நதீஷா சந்திரசேனவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Related posts

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

பாடசாலை சீருடைத் துணி தொடர்பில் கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு

editor

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 அன்று விஷேட தினமாக பிரகடனம்