உலகம்

ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம் – மும்பையில் பரபரப்பு

கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் அசம்பாவிதம் எதுவுமின்றி விமானம் தரை இறங்கியது.

மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், கொச்சியில் இருந்து மும்பை சென்ற எயார் இந்தியா விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது.

சுதாரித்துக்கொண்ட விமானி, விமானத்தை பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வந்தார்.

அசம்பாவிதம் எதுவும் இன்றி விமானம் நிறுத்தப்பட்டது. ஓடுபாதையில் சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, எயார் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது,

விமானம் தரையிறங்கும் போது, கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. எனினும் விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

விமானத்தில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சிறிய தாமதங்களைத் தவிர வேறு எந்த விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமெரிக்க உணவகத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி – எட்டு பேர் காயம்

editor

ரணிலுக்கு பிரித்தானிய பிரதமர் பாராட்டு

குவைத்தில் நாளை முதல் ஊரடங்கு