சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இந்தச் செயலமர்வில் “அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் பாராளுமன்றத்தின் செற்பாடு” என்ற தொனிப்பொருளில் பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான ஜயலத் பெரேரா, “பாராளுமன்றத்தின் குழு முறைமை” பற்றி பெண் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்தச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி, பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி அறிவதற்கு மிகவும் பொருத்தமான குழுவுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமைக்குப் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விசாகா தர்மதாச அவர்கள் இந்நிகழ்வில் நன்றியுரையாற்றினார்.
அத்துடன், இந்த நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், PAFFREL இன் பணிப்பாளர் சபை உறுப்பினருமான (கலாநிதி) ஜெஹான் பெரேராவும் கலந்துகொண்டார்.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்புப் பிரிவினால் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.