உள்நாடுபிராந்தியம்

அழகு நிலையம் ஒன்றில் மயங்கி விழுந்த பெண்கள் – நடந்தது என்ன?

கண்டி, பேராதனை வீதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்குள் இருந்த ஒரு குழு திடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அழகு நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால் மின் பிறப்பாக்கி இயக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து கதவுகள் மற்றும் யன்னல்களும் மூடப்பட்டுள்ளதோடு, குளிரூட்டியும் இயக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே இந்த அவசரநிலை ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அருகிலுள்ள கடையில் பணியாற்றும் ஒருவர், அழகு நிலையத்தின் முன் ஒரு இளம் பெண் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டார்.

பின்னர் அவர், மேலும் பலருடன் சேர்ந்து கதவைத் திறந்து உள்ளே சென்ற போது அங்கு ஆண் ஒருவர் மற்றும் 6 இளம் பெண்கள் மயக்கமடைந்து காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து குறித்த குழுவினர் பொலிஸாருக்கு தகவல் அளித்ததோடு, மயக்கமடைந்த குழுவை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களில் 6 பேர் கண்டி தேசிய வைத்தியசாலையிலும், இரண்டு பேர் கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இளம் பெண்களில் 4 பேர் அழகு நிலையத்தில் பணிபுரிபவர்கள் என்றும், ஏனையவர்கள் சேவைகளைப் பெற வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அழகு நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியில் இருந்து விஷ வாயு உருவாகிய நிலையில், இவர்கள் குளிரூட்டியை இயக்கியதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இராஜினாமா

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு