இஸ்ரேலில் தொழிலில் ஈடுபடும் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இஸ்ரேலில் உள்ள கிரியத் மலாக்கி அருகே நேற்று (18) காலை அவர்கள் தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் 20 இலங்கையர்கள் இருந்தனர்.
பஸ் தீப்பிடித்து எரிந்து கதவுகள் அடைக்கப்பட்டதால் ஜன்னல்களை உடைத்து அவர்கள் தப்பினர்.
விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது நிலை மோசமாக இல்லை.
வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் காயமடைந்த இளைஞர் பாரிய ஆபத்தில் இல்லை என்று நிமல் பண்டாரா கூறினார்.