உள்நாடுபிராந்தியம்

ஹட்டனில் காலணி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக ஹட்டன் கிளை வீதியில் வாகன போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

-சதீஸ்குமார்

Related posts

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

மேலும் ஒரு தொகை Sputnik V இலங்கைக்கு

ரணிலின் அரசாங்கம் தயாரித்த புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டது யார் அநுர ? சஜித் பிரேமதாச கேள்வி

editor