உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சப்தன்

Related posts

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவி உட்பட 4 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைப்பு

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு