உள்நாடு

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

நடிகர் ஷாருக் கான் திட்டமிட்டபடி இலங்கை வரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka வின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் நட்சத்திரம் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது.

துரதிஷ்டவசமாக, அவரது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் City of Dreams Sri Lanka பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

ஷாருக்கானை வரவேற்பதற்காக நீங்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், உங்கள் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைந்ததை எங்களாலும் நன்கு உணர முடிகிறது. அவரது ஆதரவுக்கும் நல்லெண்ணத்திற்கும் நாங்கள் தொடர்ந்து மிகுந்த நன்றியுடன் இருக்கிறோம்.

ஆயினும் எதிர்காலத்தில் ஷாருக் கானை City of Dreams Sri Lankaவுக்கு வரவேற்பதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இதேவேளை ஷாருக்கானின் வருகை இரத்தாகியிருந்தாலும், City of Dreams Sri Lankaவின் ஆரம்ப விழா ஒரு முக்கிய கொண்டாட்டமாக திட்டமிட்டவாறு விமர்சையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்நிகழ்வில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான மேலும் பல திறமையான கலைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு இடமாக இலங்கையை உலகளவில் அங்கீகரிக்கச் செய்வதற்கான முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வை மாற்ற தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக, City of Dreams Sri Lanka பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

எதிர்வரும் காலங்களில் அரிசி இறக்குமதி செய்வது குறித்து கவனம்

editor

இனி தவணைப் பரீட்சைகள் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே- கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்