உலகம்

சிரியா மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்

சிரியாவின் இராணுவதலைமையகம் மீதும் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகள் மீதும் இஸ்ரேல் விமானதாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

சிரிய அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ள ட்ரூஸ் சமூகத்திற்கு ஆதரவாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சிரியாவிற்கான எச்சரிக்கை முடிந்துவிட்டது இனி கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிரியாவின் மூன்று தளபதிகள் கொல்லப்பட்டனர் என சிரியாவின் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவவாகனத்தொடரணிகளை இலக்குவைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டது என மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ட்ரூஸ் மற்றும் பெடோய்ன் சமூகங்களிற்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றுவரும் சுவெய்டா நகரத்திற்கு அருகில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

ஹமாஸ் பிணைக் கைதிகலானா இலங்கையர்கள்!

தடுப்பூசி செலுத்துவதை ஜேர்மனி தற்காலிகமாக இடைநிறுத்தம்

புதிய மருத்துவமனை 10 நாட்களுக்குள் – சீனா அரசு