உள்நாடு

விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சிக்கிய மரக்கறி வியாபாரி

தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளது.

இதன்போது, 31 மில்லியன் ரூபா மதிப்புள்ள சுமார் 3 கிலோகிராம் 117 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குஷ் போதைப்பொருள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரக்கறி வியாபாரி ஒருவரால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் போதைப்பொருள் கையிருப்பை 20 பெட்டிகளில் சூட்சுமமான முறையில் பொதியிட்டு கொண்டு வந்துள்ளார்.

குஷ் போதைப்பொருளுடன் கைதான நபரை மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம்

APICTA 2024 இல் பிரகாசிக்கும் இலங்கை மாணவர்கள் கௌரவிப்பு

editor

சம்பிக்க தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு அடுத்தவாரம்