உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு தீ வைத்த இனந்தெரியாதோர்!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் பணியாற்றும் சிறை அதிகாரி ஒருவரின் வீட்டுக்கு இன்று (15) அதிகாலையில் அடையாளம் தெரியாத குழு ஒன்று தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

கொழும்புத்துறை பகுதியில் உள்ள குறித்த வீட்டில் அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முன்புறத்தில் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீ பரவத் தொடங்கியதும் குடும்பத்தினர் விழித்தெழுந்து தீயை அணைத்து சேதத்தைத் தவிர்த்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்!

முன்னாள் அமைச்சர் மஹிந்தவின் இல்லம் பாடசாலைக்கு

editor

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல் இன்று