உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, புத்தளம் வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – புத்தளம் வீதியில் லுணுவில சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் பயணித்த நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அடுத்த 36 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்

editor

ஏப்ரலில் இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி – அமைச்சர் விஜித ஹேரத்

editor

வீடியோ | எனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி – விரைவில் சந்திப்பேன் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விசேட உரை

editor