உள்நாடு

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்ளூர் சந்தையில் முன்பே பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மாத்திரமே விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.

சந்தையில் தேங்காய் எண்ணெய் விற்பனையை தரப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய்யை பொதிகள், பழைய கொள்கலன்கள் மற்றும் போத்தல்களில் விற்பனை செய்யப்படுவது சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படவுள்ளது.

சோதனைகள் நடத்தப்பட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் புதிய விதிமுறைகளை கையாள்வதற்கு 06 முதல் 08 மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை காலவகாசம் வழங்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு

கொழும்பை அசத்தப்போகும் முக்கிய உதைப்பந்தாட்ட போட்டி!!

editor

வௌ்ளை சீனி இறக்குமதிக்கு மீள அனுமதி