அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக தேர்தல் ஆணைக்குழு இன்னும் அதற்குத் தயாராக இல்லை என்பதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பு பல புதிய சட்டங்களை பாராளுமன்றம் விரைவாக நிறைவேற்றுவது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆனந்த ரத்நாயக்க கூறினார்.

அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் வரை தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் நாட்டில் மாகாண சபைகள் நிறுவப்பட்டுள்ளன.

Related posts

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை