சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று (15) காலை, பிரதேச சபையின் பழைய அலுவலகம் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, அங்கு காணப்படும் முக்கிய பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், சேவிஸ் சென்டர், களஞ்சியசாலைகள், மற்றும் வாகனங்களை பார்வையிட்டார்.
இதில், பழுதடைந்து செயலிழந்துள்ள வாகனங்களை உடனடியாக பழுதுபார்த்து, திண்மக்கழிவு முகாமைத்துவ பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
-ஷாதிர் ஏ ஜப்பார்