உள்நாடுபிராந்தியம்

மீரிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்

சம்மாந்துறையில் கஞ்சா மற்றும் பணத்துடன் நால்வர் கைது!

editor