உலகம்

லண்டனில் சிறிய ரக விமானம் விபத்து

லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று (13) மாலை சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி ஏரிந்து வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து குறித்து அறிந்த பொலிஸார், தீயணைப்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானத்தில் பயணித்தது எத்தனை பேர்?, விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

திமிங்கலங்களை கருணை கொலை செய்யும் அரசு

பிரதமர் மோடியும் பங்களாதேஷ் நோக்கி