உள்நாடு

நாட்டிற்குள் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி – கைதான இருவருக்கு விளக்கமறியல்

நாட்டிற்குள் சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஜூலை 25 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, களஞ்சியசாலை உரிமையாளருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 250 மில்லியன் பெறுமதியுடைய அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.

இதன்போது, 40 மற்றும் 50 வயதான மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

editor

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …