தர்க்க ரீதியிலமைந்த தேசிய கொள்கைகள், தனியார் துறை தலைமைத்துவம் மற்றும் நீண்டகால திட்டமிடல் என்பன நாட்டுக்குத் தேவையாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
RICS Sri Lanka Industry Dialogue in Colombo நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரம் தொடர்பிலான தனது தொலைநோக்குப் பார்வையை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு முன்வைத்தார்.
a national circular built environment framework, affordable housing for the middle class, smart urban planning, revitalizing the construction sector, and green public procurement ஆகிய இந்த ஐந்து அம்சங்களை நோக்கி நாம் நகர வேண்டியதன் முன்னுரிமை முக்கியத்துவத்தை அவர் இங்கு எடுத்துக்காட்டினார்.
கொள்கைகள் மற்றும் பேச்சுக்களை விட செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், பேச்சுக்களை விட உண்மையான செயலாக்கத்துக்கு அழைப்பு விடுத்தார். அவ்வாறே வரையறுத்த அரச நிதி இருப்பை அங்கீகரித்து கொண்டு, நகர்ப்புற இடம் சீர்திருத்தம் மற்றும் முதலீட்டாளர் வசதி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் இங்கு அழைப்பு விடுத்தார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்த அவர், ஊழலைக் கட்டுப்படுத்த முழுமையான டிஜிட்டல் மயமாக்கலுக்கும் அழைப்பு விடுத்தார்.
அவசர சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால் 2028 ஆம் ஆண்டில் ஏற்படப் போகும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு எச்சரிக்கை விடுத்தார்.
குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நியாயமானதொரு, IMF இணக்கப்பாட்டுக் கொள்கையை எட்டிக்கொள்ள தான் முன்நிற்பேன் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.