அமைச்சராகப் பணியாற்றிய போது சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 28 ஆம் திகதி மீள எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதி இன்று விடுமுறையில் இருந்ததால், வழக்கை மீண்டும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மார்ச் 31, 2010 மற்றும் மார்ச் 31, 2012 க்கு இடையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் குற்றம் சாட்டப்பட்ட மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் கூறுகின்றன.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.