உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் 20 வயதுடைய இளைஞன் கைது

குருணாகலில் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அரங்கல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆவார்.

இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொல்பித்திகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தல்!

மீண்டும் டொலர் தட்டுப்பாடு : தேங்கி நிற்கும் எரிபொருள் கப்பல்கள்