அரசியல்உள்நாடு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும் சுகாதார மற்றும்வெகுஜன ஊடக அமைச்சரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம்உல்அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (Retd) FaheemUl Aziz HI (M)) நேற்று முன்தினம் (07) சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவைச் சந்தித்தார்.

இதன்போது, நீண்டகால சமூக, பொருளாதார, கல்வி, விளையாட்டு மற்றும் அரசியல் உறவுகள், சுகாதாரம், சுதேச மருத்துவம் அத்துடன் சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளின் கலாச்சார விடயங்களை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளின் பரிமாற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை பரிமாறிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்தக்கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

கல்வித்துறையில் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் தற்போது பாகிஸ்தானிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு மருத்துவக்கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது, மேலும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறைகளுக்கு இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் தொழிற் கல்வித்துறையில் மாணவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வி பயிற்சியை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளில் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச்சந்திப்பின்போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

Related posts

தொலைபேசி சின்னத்தில் சஜித் கூட்டணி

மேல் மாகாணம் : இதுவரையில் 256 பொலிஸார் சிக்கினர்

இந்தியாவின் உறவுநிலை கைவிட்டுபோன இடத்தில் இருந்து தான் நாம் மீள தொடங்கப்பட வேண்டும்…..!