அரசியல்உள்நாடு

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இன்று ( 8) இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

சபாநாயகருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான காரணல்களாக அவருக்கு உரிமையுள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக பிற வசதிகளைப் பெறுதல், பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதற்கான குற்றச்சாட்டுகள் ஆகும்.

கொழும்பில் நேற்று ( 7) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் குழுக் கூட்டத்தில் சபாநாயகர் பெற்றதாகக் கூறப்படும் சில வசதிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாசிறி ஜெயசேகர உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சபாநாயகரை கடுமையாக விமர்சித்தமை தெரிந்ததே.

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு – IMF

சவர்க்கார விலை உயர்ந்துள்ளதா?