உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 50,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் இன்று (07) மதியம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தெமட்டகொட கொலன்னாவை வீதியில் இயங்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த ஆண்டுக்கான வரி விலக்கு அறிக்கையை வழங்குவதற்காக சந்தேக நபர் 100,000 இலஞ்சம் ரூபாய் கோரியிருந்தார்.

பின்னர், அந்தத் தொகை 50,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டு, கடந்த 3 ஆம் திகதி அவருக்கு 42,000 ரூபாய் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர் இன்று மீதமுள்ள 8,000 ரூபாவை பெறச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி

சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு

SLPP தேசியப் பட்டியலுக்கு பசிலின் பெயர் பரிந்துரை