உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (07) அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவருகிறது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை அவர் நாட்டிலேயே உள்ளார் எவரும் அழைக்கவில்லை – சாகர காரியவசம்

editor

ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியாது – நாமல் எம்.பி

editor

வவுனியா, மன்னார் வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor