உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயதான தாயும் அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

விவசாய அமைச்சின் செயலாளராக புஷ்பகுமார நியமனம்

தடைகளை தாண்டி பொலிகண்டி போராட்டப் பேரணி தொடர்கிறது

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்