நாட்டினுள் ஊழல் எதிர்ப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தலையீட்டின் கீழ் மூன்று ஆண்டு திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கத்தால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு பொறிமுறையை ஸ்தாபிப்பதன் மூலம், ஊழல் செயல்களை கையாளுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நேற்று (01) காலை, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Akio ISOMATA மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான விதிவிட பிரதிநிதி Azusa Kubota ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்வி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் முன்னிலையில் நடைபெற்றது.
பொது மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறைகளில் செயல்திறன் மற்றும் நிறுவன ஊழலைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் மூலம், நிர்வாகம் மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல், ஊழல் தொடர்பான விசாரணை செயல்முறைகளை மேம்படுத்துவதற்கு நிறுவனங்களை வலுப்படுத்துதல், பங்குதாரர்களுடனான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், வழக்குத் தொடரல் தரத்தை வலுப்படுத்துதல், ஊழலுக்கு எதிராக பயனுள்ள முறையில் அதிகாரமளித்தல் மற்றும் சமூக பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு பிரஜைகளை வலுப்படுத்தல் ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்களை இதற்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதுடன், ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாகவும், செயலூக்கமாகவும் பங்களிப்பு செய்ய இந்தத் திட்டம் மூலம் மேற்கொள்ளப்படும்.
அரசாங்க சட்டத்தரணி, ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன, இலங்கையில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர்கள், இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.