உள்நாடு

டாக்டர் மகேஷி விஜேரத்னவின் பிணை மனு ஜூலை 4 இல் விசாரணை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி விஜேரத்ன தாக்கல் செய்த பிணை மனுக்களை ஜூலை 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரிசீலிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீஜெயவர்தனபுர மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனை நிர்வாக உதவியாளர் கெகுலந்தல லியனகே இந்திகா மற்றும் மருத்துவரால் சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த முத்துக்குடா ஆராச்சிகே நிமல் ரஞ்சித் முத்துக்குடா ஆகிய மூன்று பேரை ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஜூன் 24 ஆம் திகதி கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, உத்தரவிட்டார்.

Related posts

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுப்பு

editor

வீதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது