உள்நாடு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் அன்றைய தினத்திற்கு முன்னர் விசாரணைகளை முடித்து நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு

மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

தொடருந்து சேவையில் தாமதம்!