ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாவுக்கும், 5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாவுக்கும் 2.3 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.
இதேவேளை, ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது, லாப் சமையல் எரிவாயு 12.5 கிலோ சிலிண்டர் 4,100 ரூபாவிற்கும், 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபாவிற்கும் விங்பனை செய்யப்படுகின்றது.