உலகம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த எயார் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு

எயார் இந்தியாவின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ‘ஏஐ – 357’ நேற்று (29) ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரிலுள்ள ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புது டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

அந்த விமானத்துக்குள் இயல்பைவிட அதிக வெப்பம் நிலவியது.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த விமானத்திலிருந்த பயணிகள் மாற்று வழிகளில் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

editor

ஜப்பானில் சுனாமி அலைகள் – வெளியேற்றப்பட்ட மக்கள்

editor

சர்ச்சையில் பரிஸ் டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம்