உள்நாடு

ஹந்தன மலையிடங்களில் சிக்கிய இளைஞர்கள் மீட்பு!

கண்டி ரதேமுல்ல பகுதியில் இருந்து ஹந்தன மலைக்குச் சென்று, மோசமான வானிலை காரணமாக பாதை தவறி சிக்கிக்கொண்ட இளைஞர்கள் குழுவை, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் கூட்டு முயற்சியினால் பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு இன்று காலை மீட்டுள்ளனர்.

மொத்தம் எட்டு இளைஞர்கள் நேற்று காலை ஹந்தன மலைக்கு ஏறிய நிலையில், அடர்ந்த மூடுபனியின் காரணமாக பாதையை இழந்துள்ளனர்.

உடனடியாக அவசர இலக்கத்துக்கு அழைத்துக் தகவல் அளித்த இளைஞர்கள், பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் உதவியுடன் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தின் தன்னலமற்ற சேவைக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

Related posts

தனக்கெதிராக நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் மகிந்த!

PHI அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

மோட்டார் சைக்கிளை துவம்சம் செய்த யானை!

editor