அரசியல்உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய சர்வஜன அதிகாரம்

கற்பிட்டி பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஏ எம் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் கட்சி முடிவு செய்துள்ளது.

கற்பிட்டி பிரதேச சபையின் சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவின் போது கட்சி முடிவிற்கு மாற்றமாக செயற்பட்டமையின் காரணமாக இவ்வாறு கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன கையொப்பத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

அறிக்கையின்படி கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம் இன்பாஸின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து அழைப்பு!

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை இன்று!!