உலகம்

பிலிபைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று (ஜூன் 28) காலை 7:07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், 101 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்தது.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS) இந்த நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துள்ளது.

Related posts

நைஜீரிய படகு விபத்தில் 100 பேர் மாயம்!

மற்றுமொரு பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது