அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித கைதாகிறார்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டு வரும் இலஞ்ச விவகாரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யவிருப்பதாக அவர்கள் கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இன்று (27) கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Related posts

MV Xpress pearl : தீப்பரவலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவி

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

“நஜீப் ஏ.மஜீதின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!