உள்நாடு

கொழும்பு துறைமுக கடலில் பல்கலை மாணவரைக் காணவில்லை!

கொழும்பு துறைமுகக் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் கொழும்புத் துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனவர் அஸ்கிரிய, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று நேற்றுக் (26) காலை கடலில் ஸ்நோர்கல் அணிந்து நீந்திக் கொண்டு கடலின் அடிப்பகுதியை கவனித்து கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த ஸ்நோர்களை உயிர்காப்பாளர்கள் கண்டுபிடித்தனர். 

காணாமல் போன மாணவரை தேடும் நடவடிக்கையில் கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படை பிரிவு டைவர்ஸ் மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வர வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor

ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணம்