உள்நாடுபிராந்தியம்

குருணாகல் தொழிலதிபர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

குருணாகல், மில்லாவ பகுதியில் ஹோட்டல்கள் உட்பட பல வணிக நிறுவனங்களை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபரின் சடலம் (26) பமஹாவ, தியதம்பாவில் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

குருணாகல், மில்லாவவில் உள்ள ரந்தோலா ஹோட்டலின் உரிமையாளர் கமல் குருப்பு என்பவரே கொலை செய்யப்பட்டதாக மஹாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆம் திகதி மல்லவப்பிட்டி நகருக்கு முடி வெட்டச் சென்ற அவர் காணாமல் போனதாகக் கூறி உறவினர்கள் தொரடியாவ பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

ஒரு முக்கிய பிரமுகர் காணாமல் போனமை குறித்து பொரிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தொழிலதிபருக்குச் சொந்தமான ஜீப்புக்குள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டு ஜீப்பில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்ட தொழிலதிபரிடம் சுமார் இரண்டரை மில்லியன் ரூபா பணம் இருந்ததாகவும், அவர் சில தங்க நகைகளை அடகு வைத்து அந்தப் பணத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

சடலத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் நேரில் ஆய்வு செய்த மஹாவவின் பதில் நீதிவான், சடலத்தை குருணாகல் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

Related posts

ஒரு உளுந்து வடை மற்றும் ஒரு கப் தேனீர்க்கு 1000/- ரூபா

பூஸா சிறையில் கொல்லப்பட்டவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை!

editor

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை