அரசியல்உள்நாடு

கனடா பயணமானார் பிரதமர் ஹரிணி

உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, காமன்வெல்த் கற்றல் நிர்வாக சபைக் கூட்டத்தில் பங்கேற்க தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக இன்று (24) கனடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

காமன்வெல்த் கற்றல் நிர்வாக அமைப்பின் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும்.

மேலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் செயலில் கற்றலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு ஆகிய துறைகளில் முக்கியமாக கவனம் செலுத்தும்.

புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவையும் இங்கு விவாதிக்கப்படவுள்ளன.

Related posts

மீண்டும் உயர்ந்த முட்டையின் விலை

editor

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் – அஷ்ரப் தாஹிர் MP

editor

பாராளுமன்ற தேர்தல் – வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜிபுர் ரஹ்மான்

editor