உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் இன்று (11) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்கியதன் ஊடாக அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைளுக்கு அமையவே, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ராஜபக்ஷ சுபசிங் பத்திரனகே நிபுனி கிருஷ்ணஜினா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தபால் வாக்களிப்பு தொடர்பான முக்கிய தகவல்

நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்த பாராளுமன்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய IMF பிரதிநிதிகள்

editor