உள்நாடு

துஷார உபுல்தெனியவின் விளக்கமறியல் நீடிப்பு!

சிறைக் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, துஷார உபுல்தெனியவின் சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, அவரது விளக்கமறியல் காலம் வரையில் அவருக்கு பாதி
சம்பளம் வழங்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி – தவறி விழுந்த வெளிநாட்டுப் பெண் பலி

editor

உயிர்த்தஞாயிறு தாக்குதல் – மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

editor

ஜனாதிபதியின் பொசன் பௌர்ணமி தின செய்தி