உள்நாடு

மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு வரி தொடர்பாக விழிப்புணர்வுட்டுவதற்கு செயலமர்வும் ஒன்றுகூடலும் நீர்கொழும்பில் நடைபெறுகிறது

இலங்கை மதுபான உரிமப்பத்திரதாரர்கள் சங்கம் “வரி சக்தி” தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு ஏற்பாடு செய்யும் ஒருநாள் செயலமர்வு மற்றும் சுமூக ஒன்றுகூடல் நீர்கொழும்பில் நடைபெறுகிறது.

இந் நிகழ்வு இம் மாதம் 14 ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்கொழும்பு அவென்ரா கார்ட்ன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறுகிறது.

நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாகம்,மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கப் பிரிவு, இலங்கை மதுவரித் திணைக்களம் மற்றும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அந் நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு அலுவலர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு வரி முறைமைகள், தற்போதைய ஒழுங்குவிதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பான இற்றைப்படுத்தல் மற்றும் வழிகாட்டுதல்களை பெறக்கூடிய வகையில் இச் செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அரச நிறுவனங்களின் அலுவலர்களுடன் நேரடியாக உரையாடி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெறவும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வை பெறவும் இதில் பங்கேற்போருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

செயலமர்வுக்கு மேலதிகமாக அன்றைய தினம் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட சுமூக ஒன்றுகூடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திறந்த கலந்துரையாடல்கள் மூலம் மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கும் ஏற்புடைய நிறுவனங்களுக்கிடையே வலுவானதும் சிநேகபூர்வமானதுமான உறவை கட்டியெழுப்புவதே இந் நிகழ்வின் பிரதான நோக்கமென ஏற்பாட்டுக் குழு தெரிவித்தள்ளது.

பங்கேற்பதற்கும் இதர வசதிகளுக்கும் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கைகள் காணப்படுவதால் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கான இருக்கையை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

தனஞ்சய – 0777444228, தங்கவேலு – 0777 807 88, சத்துரங்க – 0778411777

Related posts

சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்து உள்ளனர்

தலதா பெரஹராவை பார்வையிட வந்த குழந்தையை கடத்திய சந்தேகநபர் கைது

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

editor