அரசியல்உள்நாடு

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் – வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் ஆதம்பாவா எம்.பி ஆரம்பித்து வைத்தார்

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!!!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு
“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நேற்று (09.06.2025) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினறுமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட பணிப்பாளர், மற்றும் அதிகாரிகள்,அப்பிரதேச செயலாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-ஊடக பிரிவு

Related posts

‘கொவிபொல’ என்ற பெயரில் கையடக்கத் தொலைபேசி செயலி

திருமதி இலங்கை உலக அழகி 2025 இற்கான பட்டத்தை சுவீகரித்த சபீனா யூசுப்

editor

அமைச்சர் விஜித ஹேரத் விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

editor