உள்நாடு

OIC உட்பட மூன்று பொலிஸார் மீது தாக்குதல் – வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு – 5 பேர் கைது

பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்கள் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாமல் குமார விடுதலை

editor

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு சரிவு!

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)