உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை – ஒருவர் கைது

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 44 வயதுடைய வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, 43 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.

Related posts

சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்பு!

ஒரு தொகை குஷ் கஞ்சா மீட்பு

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு !