உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பலி – காத்தான்குடியில் சோகம்

காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை வேளையில் காத்தான்குடி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலை வேளையில் வீட்டிலிருந்து தனியாக வெளியேறிய சிறுவன், ஆற்றங்கரை பகுதியை நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வேளை, ஆற்றின் கரையில் நின்றபோது தவறி நீரில் விழுந்துள்ளார்.

சிறுவன் வீடு திரும்பாமல் இருப்பதைக் கவனித்த பெற்றோர்கள், அருகாமை உறவினர்கள் மற்றும் பகுதி மக்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்தை அண்மித்து பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகள் பார்வையிட்ட போது. இதில், ஆற்றை அண்மித்து அமைந்துள்ள கமெராக்களில் சிறுவன் தனியாக நடந்து செல்வது மற்றும் ஆற்றங்கரையை நோக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன.

அதன் அடிப்படையில், பிரதேச மக்கள், ஆற்றில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். தேடுதலின்போது, சிறுவன் உயிரிழந்த நிலையில் ஆற்றில் இருந்து ஜனாஸாவாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

“அரசு தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்..”

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று

சமூர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திகதி அறிவிப்பு